கொரோனா வைரஸ் அச்சத்தால் எனது முகத்தை நான் கைகளால் தொட்டேன் ஒரு வாரம் ஆகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார் , அதை தான் மிகவும் மிஸ் செய்கிறேன் எனவும் அவர் கிண்டலாக கூறியுள்ளார் ,
கொரோனா வைரஸ் அச்சத்தால் எனது முகத்தை நான் கைகளால் தொட்டேன் ஒரு வாரம் ஆகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார் , அதை தான் மிகவும் மிஸ் செய்கிறேன் எனவும் அவர் கிண்டலாக கூறியுள்ளார் , கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது உலகம் முழுவதும் இந்த வைரசுக்கு சுமார் 3 ஆயிரத்து 385 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
சுமார் 98 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் , சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 89 நாடுகளில் பரவி இருக்கிறது . சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவுக்கு முதலில் தினமும் உயிர் பலி அதிகரித்துக் கொண்டே சென்றது , பின்னர் நாளடைவில் அதன் வீரியம் குறைந்து வருகிறது. சீனா மக்களை நிலைகுலைய வைத்த கொரோனா வைரசின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது . நேற்று மட்டும் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் .
இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 42 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு வெளியே பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது வருகிறது . இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது , இதில் வைரஸ் பரவலை தடுக்கும் தீவிர நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்தினார் . இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைரஸ் அச்சத்தால் நான் எனது முகத்தை கைகளால் தொட்டு ஒரு வாரம் ஆகிறது , அதை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என கிண்டலாக கூறியுள்ளார்.