அலுவலகத்திற்கு வர தேவையில்லை, வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்...!! டுவிட்டர் நிறுவனம் அதிரடி..!!

By Ezhilarasan Babu  |  First Published Mar 4, 2020, 5:14 PM IST

சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் .  அமெரிக்கா ,  ஜப்பான் ,  ஆஸ்திரேலியா ,  தென் கொரியா ,  சிங்கப்பூர் ,  தாய்லாந்து உள்ளிட்ட  60க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது


கரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் டுவிட்டர் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என அதன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது . கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹானில்  தோன்றிய கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் பரவியுள்ளது .  சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர்.   சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் .  அமெரிக்கா ,  ஜப்பான் ,  ஆஸ்திரேலியா ,  தென் கொரியா ,  சிங்கப்பூர் ,  தாய்லாந்து உள்ளிட்ட  60க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

 

Latest Videos

இந்நிலையில்  அமெரிக்காவிலும் கொரோனா வைரசுக்கு  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது ,  அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.  கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மற்ற நாடுகளைப் போல அமெரிக்காவும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.  குறிப்பாக அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனங்கள் உஷார் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன .  பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் தலைமையகம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் கொரோனா  வைரசை கட்டுப்படுத்த டுவிட்டரில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அந்நிறுவனம் அறிவுருத்தியுள்ளது.  இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் மனிதவளத்துறை ,  அதிகாரி ஒருவர், எங்கள் நிறுவனத்தில் ஊழியர்கள் அனைவரையும்   அவரவர் வீடுகளிலிருந்தபடியே பணியாற்ற நாங்கள் ஊக்குவித்து வருகிறோம் .  நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்திற்கும் கொரோனா வருவதற்கான வாய்ப்பைக்  குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்,   குறிப்பாக தென் கொரியா ,  ஹாங்காங் ,  ஜப்பான் ,  ஆகிய நாடுகளில் உள்ள டுவிட்டர் நிறுவன ஊழியர்கள்  வீட்டிலிருந்தே  பணியாற்ற  வேண்டும் என்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 

click me!