87 ஆயிரம் கோடியை அள்ளிக்கொடுத்த உலக வங்கி..!! கொரோனாவில் இருந்து பாதுகாக்க ஏழை நாடுகளுக்கு உதவி..!!

By Ezhilarasan Babu  |  First Published Mar 4, 2020, 4:37 PM IST

இந்நிலையில் கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள நாடுகளுக்கு உதவ உலக வங்கி முன்வந்துள்ளது . இதற்காக சுமார் 87 ஆயிரம் கோடி ரூபாய்  நிதி ஒதுக்கி உள்ளது .  இது கொரோனாவால்  பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு உதவியாக வழங்கப்பட உள்ளது .  


கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக வங்கி  87 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது .  உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இது குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ள உலக  வங்கி , இதற்காக  நிதியை ஒதுக்கியுள்ளது .சீனாவில் தாக்கியுள்ள கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது . இதுவரையில்  உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். சுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 

Latest Videos

இந்நிலையில் கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள நாடுகளுக்கு உதவ உலக வங்கி முன்வந்துள்ளது . இதற்காக சுமார் 87 ஆயிரம் கோடி ரூபாய்  நிதி ஒதுக்கி உள்ளது .  இது கொரோனாவால்  பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு உதவியாக வழங்கப்பட உள்ளது .  அந்நாடுகள் கொரோனாவில்  இருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் , கையுறை மற்றும் மாத்திரை மருந்து உள்ளிட்டவைகளை வாங்க இந்நிதி பயன்படுத்தப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள உலக வங்கி தலைவர் டேவிட்  மால்பாஸ் ,

 

கொரோனா நோய் பாதிப்பால் ஏழை நாடுகள் மேலும் நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளன .  அந்நாடுகளுக்கு உதவிடும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது .  இதன்மூலம் கோரோனா  நோய் பரப்பும் கேவிட்19  வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான மருந்துகள் மற்றும் சுகாதார பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க  விரைவில் நிதி வழங்கப்படும் இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என அவர் கூறியுள்ளார் .  முன்பு எபோலா ,  ஷிகா வைரஸ் ,  உள்ளிட்ட நோய்களின் தாக்கத்தின் போது உலக வங்கி நிதி ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது . 
 

click me!