சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 20 பக்தர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புனித நகரமான மெக்காவிற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, திங்கள்கிழமை பாலத்தில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர்.
ரமலான் மாதத்தின் முதல் வாரத்தில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வருடாந்திர ஹஜ் யாத்திரை மேற்கொள்வார்கள். சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 20 பக்தர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அல்-எக்பரியா சேனல் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஐ எட்டியுள்ளது. மேலும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தோராயமாக 29 ஆக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. வாகனம் ஆனது பாலத்தில் மோதி, கவிழ்ந்து தீப்பிடித்தது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ
அக்டோபர் 2019 இல், மதீனா அருகே மற்றொரு கனரக வாகனத்துடன் பேருந்து மோதியதில் சுமார் 35 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..நமீபியா டூ இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி மரணம் - என்ன காரணம் தெரியுமா?
இதையும் படிங்க..அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கி சூடு.. குழந்தைகள் உட்பட 6 பேர் பலி - பெண்ணை சுட்டுக்கொன்ற காவல்துறை