US Gun Violence: தெரியாத்தனமாக தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 2 வயது சிறுவன்

By Kevin Kaarki  |  First Published Jun 7, 2022, 9:59 AM IST

A 2 year old boy accidentally shot and killed his father in florida- சம்பவம் நடைபெற்ற தினம், சிறுவனின் பெற்றோர் ஏற்கனவே லோட் செய்யப்பட்ட துப்பாக்கியை கவனிக்காமல் வீட்டில் வைத்து இருந்தனர்.


இரண்டு வயது சிறுவன் தவறுதலாக சுட்டதில், சிறுவனின் தந்தை உயிரிழந்த சம்பவம் புளோரிடாவில் அரங்கேறி இருக்கிறறது. லோட் செய்யப்பட்ட நிலையில் துப்பாக்கியை வைத்து விட்ட சென்றதால், சிறுவன் அதை எடுத்து விளையாடும் போது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ரெஜி மாப்ரி - மேரி அயலா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சம்பவம் நடைபெற்ற தினம், சிறுவனின் பெற்றோர் ஏற்கனவே லோட் செய்யப்பட்ட துப்பாக்கியை கவனிக்காமல் வீட்டில் வைத்து இருந்தனர். அதனை எடுத்த இரண்டு வயது சிறுவன் தந்தையை தவறுதலாக சுட்டான். இதை அடுத்து உடனடி மருத்துவ உதவிக் கோரி அவசர எண்ணிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

போலீஸ் நடவடிக்கை:

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு மருத்துவ நிபுணர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது சிறுவனின் தாய் மேரி அயலா தனது கணவரான ரெஜி மாப்ரிக்கு முதல் உதவி வழங்கிக் கொண்டு இருந்துள்ளார். இதன் பின் ரெஜி மாப்ரி அருகாமையில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அவைத்து செல்லப்பட்டார். 26 வயதான ரெஜி மாப்ரி தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக போலீசார் நினைத்து உள்ளனர். 

எனினும், விசாரணைக்கு பின் அந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதும், அதில் இரண்டு வயது சிறுவன் தான் தவறுதலாக தந்தையை துப்பாக்கியால் சுட்டான் என தெரியவந்தது. சிறுவன் தந்தையை சுடும் போது அதே அறையில் ஐந்து மாத பெண் குழந்தையும் இருந்துள்ளது. குழந்தைகள் வளர்ப்பில் அலட்சியம் செலுத்தியது மற்றும் போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் பெற்றோர் இருவரும் கைதாகி, பரோலில் வெளியே வந்துள்ளனர். 

குற்ற உணர்வு:

“துப்பாக்கி வைத்து இருப்பவர்கள் தங்களின் ஆயுதங்களை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வது அவசியம் ஆகும். இவ்வாறு இல்லாத போது, அவர்களுக்கும், அவர்களின் வீட்டிலும் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம்,” என்று கவுண்டி ஷெரிப் ஜான் மிரா தெரிவித்தார். 

“தற்போது இந்த இளம் குழந்தைகள் தங்களின் இரு பெற்றோரையும் இழந்து தவிக்கின்றனர். இவர்களின் தந்தை உயிரிழந்து விட்டார். தாய் ஜெயிலில் உள்ளார். இளம் குழந்தை தான், தனது தந்தையை சுட்டுக் கொன்றோம் என்ற குற்ற உணர்வில் வாழ்க்கையை கடக்க வேண்டும், ” என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!