பிரேசிலில் 2 மாகாண ஆளுநர்களுக்கு கொரோனா... தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

By vinoth kumarFirst Published Apr 15, 2020, 6:47 PM IST
Highlights
பிரேசிலில் உள்ள 2 மாகாண ஆளுநர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியோ டி ஜெனீரோ ஆளுநர் வில்சன் விட்ஜெல், பரா மாகாண ஆளுநர் ஹெல்டர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் உள்ள 2 மாகாண ஆளுநர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியோ டி ஜெனீரோ ஆளுநர் வில்சன் விட்ஜெல், பரா மாகாண ஆளுநர் ஹெல்டர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் பிறப்பிடமாக கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்டநாடுகளில் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. ன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. 128,008 பேர் உயிரிழந்துள்ளனர். 492,009 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், பிரேசிலில் இதுவரை 25,758 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 1,557 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், முக்கியமாக பிரேசிலில் உள்ள 2 மாகாண ஆளுநர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியோ டி ஜெனீரோ ஆளுநர் வில்சன் விட்ஜெல், பரா மாகாண ஆளுநர் ஹெல்டர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள விட்ஸல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்ததாகவும், இதையடுத்து மேற்கொண்ட கொரோனா பரிசோதனையின் போது தனக்கு தொற்று இருப்பது உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது தான் நலமுடன் இருப்பதாகக் கூறியுள்ள அவர் தொடர்ந்து பணியாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
click me!