16 லட்ச ரூபாயை தின்று அசை போட்ட ஆடு..! அதிர்ச்சியில் விவசாயி செய்தது என்ன..?

Published : Dec 08, 2018, 03:11 PM ISTUpdated : Dec 08, 2018, 03:12 PM IST
16 லட்ச ரூபாயை தின்று அசை போட்ட ஆடு..!  அதிர்ச்சியில்  விவசாயி செய்தது  என்ன..?

சுருக்கம்

மத்திய செர்பியாவில் வசிக்கும் ஒரு விவசாய குடும்பத்தினர் நீண்ட ஆண்டுகளாக  தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை அவர்கள் வளர்த்த ஆடே தின்று அசை போட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மத்திய செர்பியாவில் வசிக்கும் ஒரு விவசாய குடும்பத்தினர் நீண்ட ஆண்டுகளாக  தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை அவர்கள் வளர்த்த ஆடே தின்று அசை போட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் என்ற பகுதியில் வசிக்கும் விவசாய குடும்பத்தினர் சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என திட்டம் போட்டு பல  ஆண்டுகளாக குருவி சேர்ப்பது போல பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து உள்ளனர்.


 
அந்த பணத்தின் மூலம் 10 ஹெக்டர் நிலம் வாங்க முடிவு செய்து உள்ளனர்.ஒரு கட்டத்தில் 16 லட்சம் பணம் சேர்ந்தவுடன், நிலம் வாங்க ஆயத்தமாகி அந்த பணத்தை சரியாக எண்ணி அவர் வீட்டில் உள்ள சிறிய மேஜையில் வைத்து உள்ளார். அப்போது வீட்டின் வெளியில் இருந்த ஆடுகளுக்கு தண்ணீர் வைக்கும் வேலையில் பிசியாக இருந்துள்ளார். அவரது குடும்பத்தினரும் அவருக்கு உதவி செய்து இருந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த கூட்டத்தில் இருந்த ஆடு ஒன்று வீட்டிற்குள்   நுழைந்து உள்ளது. அப்போது  மேஜையில் இருந்த பணத்தை தனக்கு உணவாக்கி உள்ளது... ஆடுக்கு தெரியுமா என்ன.. அது பணம் என்று.... பின்னர் உள்ளே வந்து பார்த்த விவசாயி பணம் இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ந்து போயுள்ளார். பின்னர் ஆட்டு வாயில் ஒட்டிக்கொண்டிருந்த பணத்தாளின் துண்டுகளும் கீழே சிதறிக் கிடந்த கொஞ்சம்  பணத்தையும் பார்த்து நெஞ்சே அவருக்கு வெடிக்கும் அளவிற்கு இருந்து உள்ளது. அனைத்து பணத்தையும் ஆடு பசிக்கு உண்டு உள்ளது....

பின்னர் அதே கோபத்தில் என்ன செய்வது என்று புரியாமால், அந்த ஆட்டை ஒரே வெட்டாய் வெட்டி பிரியாணி செய்து குடும்பமே ஒன்றாக அமர்ந்து உண்டுள்ளனர்.
பணத்துக்கு பணமும் போச்சி.. ஆட்டுக்கு ஆடும் போச்சி... 

PREV
click me!

Recommended Stories

இந்தியா-பங்களாதேஷ் எல்லை.. ஈசியாக பார்டரை தாண்டும் இளைஞர்கள்.. வைரல் வீடியோ!
ஆங் சான் சூச்சி உயிருடன் இருக்கிறாரா?.. எந்த தகவலும் தெரியவில்லை.. மகன் கிம் அரிஸ் கவலை!