எகிப்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
எகிப்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
எகிப்து நாட்டின் பல பகுதிகளில் மோசமான சாலைகள் மற்றும் முறையாக பராமரிக்கப்படாத வாகனங்களால் ஆண்டுதோறும் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் வெளியான புள்ளிவிபரங்களின்படி அந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 3087 உயிரிழந்துள்ளனர். சுமார் 12 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, எதிர்திசையில் வந்த லாரி எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மற்றொரு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.