டைட்டானிக் கப்பல்ல என்னென்ன உணவு இருந்துச்சு தெரியுமா.? ட்ரெண்டாகும் டைட்டானிக் மெனு கார்ட்

By Raghupati R  |  First Published Apr 21, 2023, 5:24 PM IST

டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகளைக் கடந்தும் உலக மக்களின் நினைவுகளில் இருந்து நீங்காமல் மிதந்து கொண்டேதான் இருக்கிறது.


இன்றுவரை சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்களையும், கப்பல் ஆய்வாளர்களையும் டைட்டானிக் தன்மீதான பார்வையை அகற்ற அனுமதிக்கவே இல்லை டைட்டானிக் கப்பல். டைட்டானிக் கப்பலின் பிரம்மாண்டத்தை போல அது குறித்த ஏராளமான புத்தகங்களும், ஆவணப்படங்களும், திரைப்படங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இங்கிலாந்தின் சதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து ஃபிரான்ஸ், அயர்லாந்து வழியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரை அடைவதுதான் டைட்டானிக் கப்பலின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 10 அடுக்குகளுடன் 882அடி நீளம்,92.5 அடி அகலத்தில்15 ஆயிரம் பேர் கொண்ட பொறியாளர் படை கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டது. 

Latest Videos

undefined

முதல் முதலாக கப்பல் நீருக்குள் இறக்கப்பட்டபோது ஒரு லட்சம் பேர் கண்டு கழித்தனர். பின் ஒரு வருடம் வரை உள் அலங்கார பணிகள் மட்டுமே நடைபெற்றது. டைட்டானிக் கப்பலின் மொத்த மதிப்பு 7.5 மில்லியன் டாலர் ஆகும். ஏப்ரல் 14-ம் நாள் நள்ளிரவு சரியாக 11.40 மணியளவில் வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பனிப் பாறையில் மோதியது டைட்டானிக். 

ஏழரை மில்லயன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு 46,000 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள சொகுசு கப்பல் பயணிகளுடன் கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது. ஏப்ரல் 15-ம் தேதி அதிகாலை 4.10-க்கு ஆர்.எம்.எஸ். கார்பெத்தியா உதவிக்கு வரும்போது டைட்டானிக் கப்பல் 3,700 மீட்டர் ஆழத்தில் மூழ்கிவிட்டது.1500 பேர் உயிரிழந்தனர்.1160 பேரை காணவில்லை. 705 பேர் உயிர் பிழைத்தனர். 

இந்த நிலையில் டைட்டானிக் கப்பல் மூழ்கிய 111வது நினைவு தினமான ஏப்ரல் 15ல் டைட்டானிக் அட்லஸ் என்ற இன்ஸ்டாகிராம் பேஜில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான இரவு பரிமாறப்பட்ட உணவு வகைகளின் மெனு பகிரப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..அட்சய திரிதியை அப்போ இதையெல்லாம் தானமா கொடுங்க.! லட்சுமி கடாட்சம் வரும்! செல்வம் கொட்டும்!!

முதல் வகுப்பு:

முதல் வகுப்பு பயணிகளுக்கு ஃபில்லட்ஸ் ஆஃப் ப்ரில், கார்ண்ட் பீஃப், வெஜிடபில்ஸ், டம்ப்ளிங்ஸ், க்ரில்ட் மட்டன் சாப்ஸ், கஸ்டர்ட் புட்டிங், பாட்டட் ஷ்ரிம்ப்ஸ், நார்வேஜியன் ஆன்சோவீஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் வகுப்பு:

சிக்கன் கறி, வேகவைத்த மீன், ஸ்ப்ரிங் லேம்ப், ஸ்ப்ரிங் மட்டன், டர்கி ரோஸ்ட், புட்டிங் எனப் பரிமாறப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு ப்ளம் புட்டிங் டெஸர்ட்டாக பரிமாறப்பட்டுள்ளது.

மூன்றாம் வகுப்பு:

மூன்றாம் வகுப்பு பயணீகளுக்கு ஓட்மீல் பாரிட்ஜ், பால், ஸ்மோக்ட் ஹெர்ரிங்ஸ், ஜேக்கட் பொட்டேடோஸ், முட்டைகள், ஃப்ரெஷ் ப்ரெட், பட்டர், மர்மலேட், ஸ்வீடிஷ் ப்ரெட் போன்றவை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மெனு கார்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ

இதையும் படிங்க..iQOO : இப்படியொரு ஆஃபர் கிடைக்காது.. iQOO ஸ்மார்ட்போன்களுக்கு 25,000 வரை ஒரிஜினல் தள்ளுபடி - முழு விபரம்

click me!