நீலா ராஜேந்திரா யார் இவர்? ஏன் டிரம்ப் இவரை பணியில் இருந்து நீக்கினார்?

Published : Apr 16, 2025, 05:01 PM ISTUpdated : Apr 16, 2025, 09:13 PM IST
நீலா ராஜேந்திரா யார் இவர்? ஏன் டிரம்ப் இவரை பணியில் இருந்து நீக்கினார்?

சுருக்கம்

நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி (DEI) துறையின் தலைவரான நீலா ராஜேந்திரா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் DEI முன்முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நீலா பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நாசா அதன் DEI அலுவலகத்தை மூடியது, பின்னர் நீலாவுக்கு வேறு பொறுப்பு வழங்கப்பட்டு, அதிலிருந்தும் நீக்கப்பட்டார்.

Neela Rajendra: நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி (DEI) துறையின் தலைவரான நீலா ராஜேந்திரா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் ஏன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறித்து பார்க்கலாம்.

DEI துறைக்கு டிரம்ப், எலான் மஸ்க் எதிர்ப்பு:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அமெரிக்க குடிமகளான நீலா ராஜேந்திரா. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி ( DEI) முன்முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நீலா பணிநீக்கத்தை எதிர்கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில், JPL இயக்குனர் லாரி லெஷின் ஒரு இமெயிலில், ''நீலா ராஜேந்திரா இனி ஆய்வகத்தின் பணியில் இல்லை. எங்கள் நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டு இருந்தார்.

நீலா ராஜேந்திரா பணியில் இருந்து நீக்கம்:
இந்த சம்பவத்தை அடுத்து நாசா தனது DEI அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக மூடியது. ஆனால் நீலா ராஜேந்திராவுக்கு இதே போன்ற பொறுப்புகளைக் கொண்ட ஒரு புதிய பொறுப்பை வழங்கியது.  நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (JPL) தலைமை பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் ஈகுவிட்டி அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜேந்திரா, 'Office of Team Excellence and Employee Success'' குழுவில் பணி வழங்கப்பட்டது. ஆனால், அங்கு அவர் ஒரு குழுவை வழி நடத்தி வந்தார். பின்னர் அந்தப் பணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

நாசாவில் சுமார் 900 பேர் பணியிழப்பு:
அனைத்து அரசு நிறுவனங்களிலும் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி திட்டங்களை தடை செய்வதற்கு டிரம்பின் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து, மார்ச் மாதத்தில் நாசா அதன் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி பிரிவை கலைத்தது. 2024 ஆம் ஆண்டில், நாசாவில் சுமார் 900 பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த நேரத்தில் ராஜேந்திரா தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். பின்னர் பணிமாற்றம் செய்யப்பட்டு பதவியை இழக்க நேரிட்டது.

எதற்காக நீலா பணிநீக்கம் செய்யப்பட்டார்?
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (JPL) DEI அதிகாரியாக, நீலா ராஜேந்திரா பணியாற்றினார். பெண்கள் மற்றும் சிறுபான்மையினரை ஆட்சேர்ப்பு செய்வதில் கவனம் செலுத்தும் 'விண்வெளிப் பணியாளர்கள் 2030' போன்ற முயற்சிகளை ஆதரித்து வந்தார். "இந்த திட்டங்கள் அமெரிக்கர்களை இனத்தால் பிரித்து, வரி செலுத்துவோர் டாலர்களை வீணடித்து, வெட்கக்கேடான பாகுபாட்டை விளைவித்தன" என்று டிரம்பின் வாதிட்டு வந்தார். இவரது கருத்தையே எலான் மஸ்க்கும் பிரதிபலித்தார்.  இந்த நிலையில் தான் அரசு அலுவலகங்களில் தேவையில்லாத துறைகளை டிரம்ப் நிர்வாகம் காலி செய்து வருகிறது. 

நீலா ராஜேந்திரா கல்வி:
நீலா ராஜேந்திரா வட கரோலினா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் இசையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும் 2008 ஆம் ஆண்டு வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழக வணிகப் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார். தனது படிப்புக்குப் பிறகு, பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு குறுகிய காலப் பதவிகளை வகித்தார். 2021 இல் நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி துரையின் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்று இருந்தார். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

காஷ்மீர் விவகாரத்தில் நாட்டாமை செய்ய மாட்டோம்... அடியோடு மனம் மாறிய ட்ரம்ப்..! பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு தீ..! நேபாளப் பிரதமர் ராஜினாமா..! நாட்டை விட்டே ஓடிய தலைவர்கள்..!