tamilnadu
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசு எடுத்து நடத்தி வருகிறது. 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக்கில் வரும் வருமானத்தை வைத்து தான் அரசு இயந்திரமே இயங்குகிறது. தினமும் 100 கோடிக்கு மது விற்பனையாகும். இதுவே தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் விற்பனை இரட்டிப்பாகும்.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற விஷேச நாட்களில் கூட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதில்லை
டாஸ்மாக் கடைகளுக்கு திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, தைப்பூசம், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய 8 நாட்கள் விடுமுறை.
அந்த வகையில் மகாவீர் ஜெயந்தி வருகிற ஏப்ரல் 10ம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் அப்போதே குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.