தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது
Image credits: X-@Shaan_Official3
பள்ளிகளுக்கு விடுமுறை
மழையின் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை- ஒரு சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Image credits: our own
தொடரும் மழை
தமிழகத்தில் இரவில் இருந்து மழையானது தொடர்கிறது. நாளையும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்குமா.? என மாணவர்கள் எதிர்பார்ப்பு
Image credits: social media
திருவண்ணாமலை தீபம்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. மகா தீபத்தை பார்க்க 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திருவண்ணாமலைக்கு வரவுள்ளனர்.
Image credits: our own
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (டிச.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈடு செய்ய டிசம்பர் 21ஆம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் செயல்படும்.