life-style
கோடை காலம் மாம்பழ சீசன் என்பதால் விற்பனையாளர்கள் இரசாயனங்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்கிறார்கள்.
மாம்பழத்தை விரைவில் பழுக்க வைக்க கார்பைடு பயன்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்று FSSAI எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட மாம்பழம் வெளியில் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், உள்ளே பச்சையாகவே தான் இருக்கும்.
ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழத்தில் இயற்கையான இனிப்பு இருக்காது. மேலும் ஊட்டச்சத்து மதிப்பும் குறைவாக இருக்கும்.
ரசாயன பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழம் சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி, தலைவலி, தலை சுற்றல், வாய் புண், சுவாசிப்பதில் சிரமம், பிரச்சனை போன்றவை ஏற்படும்.
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லதல்ல.
செயற்கை மாம்பழம் பிரகாசமான மஞ்சள் நிறமாகவும் கடினமாக இருக்கும். மேலும் கடுமையான மணத்தையும் கொண்டிருக்கும்.
இயற்கை மாம்பழம் சற்று மென்மையாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும்.