health
நடைபயிற்சி என்பது நிச்சயமாக உடற்பயிற்சி தான். உடல், மன ஆரோக்கியத் துறை கூட நிபுணர்கள் இதை ஒப்புக்கொள்கிறார்கள்.
தினமும் 30 நிமிடங்கள் நடப்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் டிமென்சியா, இதய நோய்களின் அபாயம் குறையும்.
இயற்கை சூழல்களில் நடைபயிற்சி செய்வது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். புதிய ஐடியாக்கள், புத்துணர்வை தருகிறது.
தசை சகிப்புத்தன்மை, ஆற்றலை அதிகரிக்கலாம். இரத்த அழுத்தம் குறையும். எலும்புகள் வலுப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உங்களுடைய உடலமைப்பை மாற்றியமைப்பதில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் நடக்கிறது.
50 வயதுக்குட்பட்ட உடல் பருமன் கொண்ட ஆண்கள், பெண்களில் எடை இழப்புக்கு நடைபயிற்சி உதவுகிறது.
மெதுவாக ஓடுவதால் (jogging) கணுக்கால்களில் அழுத்தம் ஏற்படும். நடைபயிற்சியில் கால், கன்று தசைகள் வலுவாகும்.
வாரத்திற்கு 150 நிமிடங்கள் எனும் வீதம் நடைபயிற்சியினை ஐந்து நாட்களுக்கு 30 நிமிடங்கள் என நடக்கலாம்.
நடைபயிற்சியை தினமும் செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உயர் ரத்த அழுத்தம் குறையும்.
நடைபயிற்சி மட்டுமே உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தந்தாலும் வாரத்தில் இரண்டு நாட்கள் உடல் வலிமைக்கான பயிற்சிகளை செய்யலாம்.