Beauty
1 முட்டை, 1 கப் தயிர் மற்றும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
முட்டை மற்றும் தயிர் ஹேர் மாஸ்க் செய்ய முதலில் ஒரு கிண்ணத்தில் தயிர், முட்டை, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும்.
முதலில் தலை முடியை இரண்டு பகுதிகளாக பிரித்து தயாரித்து வைத்த ஹேர் மாஸ்கை முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவி, சுமார் 1 நேரம் அப்படியே வைக்கவும்.
ஹேர் மாஸ்க் நன்றாக காய்ந்த பிறகு சூடான நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். தலைமுடியை காய வைக்க ஹேர் டிரையர் பயன்படுத்த வேண்டாம்.
உங்கள் தலைமுடி வறண்டு போய் இருந்தால் இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தினால், உங்கள் தலைமுடி பட்டு போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. இது முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கும். தயிரிலும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை இரண்டும் சேர்ந்து கூந்தலுக்கு நன்மைகளை வழங்கும்.
இந்த ஹேர் மாஸ்க் பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் முடியை வலுவாக மாற்ற உதவும்.