Food
ஐஸ்கிரீமை விரும்பாத குழந்தைகள் வெகுகுறைவு. அதிலும் கோடைகாலத்தில் வீதிக்கு விதி ஐஸ்கிரீம் வண்டிகள் படையெடுக்கும்.
ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் பொருள்கள் சுகாதாரமற்றவையாக இருப்பதாக அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
கர்நாடகாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) செய்த சோதனையில் சுகாதாரமற்ற சூழலில் ஐஸ்கிரீம்கள் தயாரிப்பது தெரியவந்தது.
பல்வேறு கடைகளில் சோப்புப் பொடியை கலந்து ஐஸ்கிரீம் செய்தது கண்டறியப்பட்டது.
ஐஸ்கிரீம்களின் உற்பத்தி செலவை குறைக்க சோப்பு, யூரியா, ஸ்டார்ச் உள்ளிட்டவற்றால் செய்த செயற்கைப் பால் சேர்க்கப்படுகிறது.
சுவையும், நிறமும் அதிகரிக்க சாக்கரின், அங்கீகரிக்கப்படாத சாயங்களை கலக்குவதாகவும் சொல்லப்படுகிறது.
எலும்புகளை அரிக்கும் தன்மை கொண்ட பாஸ்போரிக் அமிலம் குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிறது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசுத்தமான, குடிக்கத் தகுதியில்லா தண்ணீரைப் பயன்படுத்துவதாவும் கர்நாடகாவில் நடத்தப்பட்ட சோதனையில் தெரிய வந்தது.
குழந்தைகளுக்கு முடிந்தவரை வீட்டில் செய்து ஐஸ்கிரீம்களை வழங்குகள். அதுவே அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.