
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. நம்நாட்டை தாக்க முயன்ற பாகிஸ்தானின் ட்ரோன், ஏவுகணைகள், போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்ததில் ரஷ்யாவிடம் இருந்து நாம் வாங்கிய வான்வெளி பாதுகாப்பு அமைப்பான எஸ் - 400 முக்கிய பங்காற்றியது. இதனால் தான் பாகிஸ்தானால் நம்மை தாக்க முடியவில்லை. இந்நிலையில் தான் துருக்கி மூலமாக ரஷ்யாவின் எஸ் 400 அமைப்பு பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானை நம்மால் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முடியாத சூழல் வரலாம். இதனால் இந்தியா உடனடியாக சுதாரிக்க வேண்டும். மேலும் துருக்கியிடம் வழியாக ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணை எப்படி பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.