
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து வருவதாக இந்தியா நீண்ட காலமாகவே குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் இதுவரை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு 30 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்து வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசீப் தெரிவித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசமான காரியத்தை அமெரிக்கா மட்டுமின்றி, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்காக கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்து வருகிறது. இந்த தவறால் நாங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.