
ஈரான் மீது அமெரிக்கா நடத்தியிருந்த தாக்குதல்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. வடகொரியாவும் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறது. "மத்திய கிழக்கில் இப்போது நிலவும் பதட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம். இரு நாடுகளின் இந்த பொறுப்பற்ற செயல்களுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்று வடகொரியா அழைப்பு விடுத்திருக்கிறது.