துருக்கிக்கு மொத்தம் 3,30,985 பேர் விசிட் செய்திருந்தனர். இது 2023ம் ஆண்டை ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகம். துருக்கிக்கு அதிகமாக ஐரோப்பா மற்றும் ரஷ்யா மக்கள் தான் சுற்றுலா செல்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளால் நம் நாட்டில் இருந்து மக்கள் அதிகம் செல்ல தொடங்கினர். கடந்த 2018 - 19 காலக்கட்டத்தில் இந்தியா - துருக்கி இடையேயான விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டது. இதுவும் இந்தியர்கள் துருக்கிக்கு அதிகம் சுற்றுலா செல்ல காரணமாக அமைந்தது.