கட்சி கொடியின் அறிமுக விழா.. கண்கலங்கிய தளபதி விஜய் - எமோஷனலான தொண்டர்கள்! Video!

Ansgar R |  
Published : Aug 22, 2024, 10:30 PM IST

Thalapathy Vijay : தளபதி விஜய் இன்று தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கட்சி பாடலும் இன்று வெளியானது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய், இந்த ஆண்டு துவக்கத்தில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரு பட பணிகளை மட்டும் முடித்துவிட்டு, பின் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும், சினிமாவில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறவுள்ளதாகவும் அறிவித்தார். 

இந்த நிலையில், இன்று ஆகஸ்ட் 22ம் தேதி தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பனையூர் அலுவலகத்தில் அக்கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. இரு ஆபிரிக்க யானைகள் பிளிற, வாகை என்பதும் மரத்தின் பிங்க் நிற பூ ஒன்று இடையில் உள்ளது போல அமைந்திருக்கிறது அக்கட்சியின் கொடி. இந்த கொடி அறிமுக விழாவில், த.வெ.க கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில் இன்று தனது கட்சி கொடியை ஏற்றி அறிமுகம் செய்துவைத்தபோது, தளபதி விஜய் கண்கலங்கி நின்றதை பார்த்து, அவரது கட்சி தொண்டர்கள் மிகவும் எமோஷனலாக மாறியுள்ளார். மேலும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் கட்சியினர் நமது ஏசியாநெட் தமிழ் செய்தி நிறுவனத்திடம் பல செய்திகளை பகிர்ந்துகொண்டனர்.

07:54ஒரு நிலையற்ற ஆட்சி இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
04:36பணப்பெட்டியும் வாக்குப்பெட்டியும் இருக்கும் வரை நேர்மையான ஆட்சி சாத்தியமில்லை ! சீமான் அதிரடி
04:24திரைக்கவர்ச்சி மோகம் இந்தியாவிலேயே நமது இனத்திற்குத்தான் அதிகம் ! சீமான் பரபரப்பு பேச்சு
06:33யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், செயல்பாடுகளைப் பார்த்து விமர்சிப்போம் ! தமிழிசை பேட்டி
04:28கிண்டி அரசினர் ஐ.டி.ஐ-யில் புதிய மின்சார திறன் ஆய்வகங்கள் திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
04:43சூரசம்ஹாரத்திற்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்!
03:48சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு: மேயர் ஆர். பிரியா பேச்சு
07:39மக்கள் தொண்டே மகேசன் தொண்டு : சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுரை !
07:40தண்ணீரால் நிறைந்த ஆலத்துடையான்பட்டி குளம்": ட்ரோன் கேமராவில் படமாக்கப்பட்ட வண்ணமயமான காட்சிகள்!
05:2948வது உலகத்திறன் போட்டியில் சாதனை படைத்த 12 பேருக்குப் பாராட்டு : பரிசுகளை வழங்கினார் முதல்வர் விஜய்
Read more