வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் இசைஞானி இளையராஜா இயற்றியிருக்கும் சிம்பொனி 2025 மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக முதன்முறையாக அரங்கேற்றப்பட உள்ளது. இந்தியாவின் முதல் சிம்பொனி வெளிவர உள்ள நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வாழ்த்து தெரிவித்தார்.