பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதையே பாஜக வலியுறுத்துகிறது . தனியார் பள்ளிகளுக்கு ஒரு மாதிரியான கல்வியும் , அரசு பள்ளிகளுக்கு ஒரு மாதிரியான கல்வியும் இருந்து கொண்டிருக்கிறது . இதை மாற்றி அனைவருக்கும் சமமான கல்வியை கொண்டு வரவேண்டும் . இதை தமிழ் நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர் ஆட்சியில் செய்யாமல் இருக்கிறார் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியுள்ளார் .