vuukle one pixel image

Savukku Shankar |சவுக்கு சங்கர் வீட்டிற்குள் புகுந்த 50 பேர்? வெளியான பரபரப்பு வீடியோ காட்சிகள்!

Velmurugan s  | Published: Mar 24, 2025, 8:00 PM IST

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் சம்பவம் நடந்தது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த சவுக்கு சங்கர், துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக்கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தியது. நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர் என பதிவிட்டிருந்தார் .தாக்குதல் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.