Bomb threat to Chepauk stadium | சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Bomb threat to Chepauk stadium | சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published : May 09, 2025, 07:02 PM IST

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல் இடையே போட்டி நடைபெற்று வந்தது. இரவு 8.30 மணியளவில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் கடும் சண்டை நடந்த நிலையில் ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சூழலில் இன்று (மே 9) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மைதான அலுவலகத்திற்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் வந்துள்ளது.ஐபிஎல் போட்டி நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என்றும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இ மெயிலை தொடர்ந்து மோப்ப நாய் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சேப்பாக்கம் மைதானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

03:59ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வித்யா ராம்ராஜிற்கு உற்சாக வரவேற்பு!
03:21ஹைதராபாத் வருகை தந்தார் எம்.எஸ். தோனி : மனைவியுடன் விமான நிலையத்தில் வரவேற்பு !
05:50பெண்களுக்கு எதிரான தடைகளை உடைப்போம்! – ரேஸிங் வீராங்கனை அலிஷா அப்துல்லா அதிரடி பேட்டி
06:44TNPL 2026 Qualifier 2: திருச்சி அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி – ஃபைனலுக்கு தகுதி!
06:38TNPL: மல்லுகட்டிய நெல்லை… கெத்து காட்டிய மதுரை!
06:38கோவை கிங்ஸின் விஸ்வரூபம்: 116 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை வீழ்த்தி அபார வெற்றி!
06:28மோகித் ஹரிஹரனின் அதிரடி சதம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
06:4281 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அபார வெற்றி ! சேலம் ஸ்பார்ட்டன்ஸ் போராட்டம் தோல்வியில் முடிவு!
06:32TNPL 2026 Match 17: ஷ்யாம் சுந்தரின் அதிரடி சதம்! திருச்சியிடம் வீழ்ந்த திருப்பூர்!
06:37TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
Read more