ஹாலிவுட் படம் பாணியில் பறந்து சென்று கார் விபத்து... பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் பலி... அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

Published : Aug 13, 2019, 04:48 PM ISTUpdated : Aug 13, 2019, 04:52 PM IST
ஹாலிவுட் படம் பாணியில் பறந்து சென்று கார் விபத்து... பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் பலி... அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

சுருக்கம்

ஐதராபாத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஹாலிவுட் படம் பாணியில் நடப்பதை போன்று பறந்து சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாஜக தலைவர் கிஷோர் சாரி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் பாஜக தலைவர் கிஷோர் சாரி தனது மனைவி, 2 மகன்களுடன் எஸ்யுவி காரில் கரீம் நகருக்கு வேகமாக சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, கார் அதிக வேகத்தில் இயக்கப்பட்டதால் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையிலிருந்த தடுப்பில் மோதி சாலையின் எதிர்புறம் வந்துக் கொண்டிருந்த கார் மீது பற்து சென்று மோதியது. 

இதில், பாஜக தலைவர் கிஷோர் சாரி, அவரது மனைவி மற்றும் ஒரு மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இளைய மகன் படுகாயமடைந்தார். அதேபோல், மற்றொரு காரில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இஸ்ரோவின் 'பாகுபலி' ராக்கெட் சாதனை! வெயிட்டான சாட்டிலைட் வெற்றிகரமாக ஏவப்பட்டது!
ரூ.1 லட்சத்துக்கு காண்டம், ரூ.4 லட்சத்துக்கு நூடுல்ஸ்.. 2025ல் இந்தியர்கள் செய்த வினோத ஆர்டர்கள்!