காஷ்மீர் பாதுகாப்பு பணியில் தோனி... கிரிக்கெட் வேண்டாம் , நாடுதான் முக்கியம்...

By Asianet TamilFirst Published Aug 13, 2019, 12:36 PM IST
Highlights

தற்போது காஷ்மீர் பேராஷூட் ரெஜிமென்ட் ல் பாராசூட் கமாண்டராக அவர் பயிற்சி பெற்று வருகிறார். இடை இடையே காஷ்மீர் பகுதியில் ராணுவ ரோந்து வாகனத்திலும் தோனி முழு இராணுஉடையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.
 

கிரிக்கெட் போட்டிகளில் நாட்டின் மானத்தை காப்பாற்றி தோனி, நாட்டு மக்களை காப்பாற்றும்  ராணுவ வீரராக மாறியுள்ளார் , அதற்காக அவர் கடுமையான பயிற்ச்ச்களை மேற்கொண்டு வருகிறார்...

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல்ஆக உள்ளார் ராணுவத்திலும் கிரிக்கெட் போட்டிகளிலும் மாறி மாறி பணி செய்து வந்த  தோனி, உலக கோப்பை தொடருக்குப் பின்னர் இரண்டு மாத கால இராணுவ பயிற்சியில் ஈடுபட போவதாக கூறி இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார்.

தற்போது காஷ்மீர் பேராஷூட் ரெஜிமென்ட் ல் பாராசூட் கமாண்டராக அவர் பயிற்சி பெற்று வருகிறார். இடை இடையே காஷ்மீர் பகுதியில் ராணுவ ரோந்து வாகனத்திலும் தோனி முழு இராணுஉடையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாட்டு மக்களை காக்கும் ராணுவ வீரராக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில்  கம்பீர தோற்றத்துடன்ராணுவ மிடுக்குடன் தோனி ராணுவ  பயிற்சிபெறும்  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  வெளியாகி வருகிறது

click me!