Oct 11, 2022, 5:44 PM IST
முதல் நாளே போட்டியாளர்களுக்கு டாஸ்க் வைத்து, அணியின் தலைவரை பிக்பாஸ் தேர்வு செய்த நிலையில், இன்றைய தினம் சற்றும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது, இதற்க்கு முன்னர் வெளியான இரண்டு புரோமோக்கள் மூலம் தெரிகிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், ஆயிஷா இரண்டாம் நாளே அழுகாச்சியாக மாறியுள்ளார்.
அசல் கோலாரிடம் டாஸ்க் ஒன்றிற்காக ஆயிஷா பேசிக்கொண்டிருந்தபோது... திடீர் என அவர் என்னை வாடா போடா என்றெல்லாம் அழைக்காதே என கூறினார். இதனால் செம்ம மூட் அவுட் ஆன ஆயிஷா தனியாக அமர்ந்து அழுவது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவை பார்த்து இதெல்லாம் ஒரு பிரச்சனையா... இனிமேல் தான் இருக்கு மெயின் பிக்ச்சர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.