விஜய் சேதுபதியின் ‘டிஎஸ்பி’ படம் மூலம் கம்பேக் கொடுத்த பாடகர் உதித் நாராயணன் - வைரலாகும் ‘நல்லா இருமா’ பாடல்

Published : Nov 17, 2022, 08:52 AM IST

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி படத்தில் இடம்பெறும் நல்லா இருமா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் தற்போது இயக்கியுள்ள படம் தான் டிஎஸ்பி. நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுகீர்த்தி என்கிற புதுமுக நடிகை நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், நடிகை ஷிவானி, ஷாந்தினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. நல்லா இருமா என தொடங்கும் அப்பாடலை பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணன் பாடி இருக்கிறார். அவருடன் சூப்பர் சிங்கர் பிரபலங்களான செந்தில் மற்றும் மாளவிகா சுந்தர் ஆகியோரும் இணைந்து பாடி இருக்கின்றனர். திருமணமாகும் பெண்ணை வாழ்த்தி அவரின் முன்னாள் காதலன் பாடும்படியான இப்பாடல் இனி பெரும்பாலான லவ் பெயிலியர் ஆன பசங்களின் ரிங்டோனாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

09:23இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி !
04:04இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !
03:39இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் !
03:13திரையுலகில் இயக்குநராக அறிமுகம்: "சிகமா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேசன் சஞ்சய் பேச்சு!
01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
Read more