சிவகார்த்திகேயனுக்கு முன்பே என்னிடம் துப்பாக்கியை வழங்கி விட்டார் விஜய் - நடிகர் உதயா பெருமிதம் !

Published : Aug 05, 2025, 01:02 PM IST

நடிகர் உதயா நடிப்பில் வெளிவந்துள்ள அக்யூஸ்ட் திரைப்படம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் உதயா இயக்குனர் பிரபுசீனிவாசன் உட்பட அக்யூஸ்ட் திரைப்பட குழுவினர்கள் நடிகர் உதயா ரசிகர் நற்பணி மன்ற மதுரை மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு திரைப்படத்தின் விமர்சனங்களை கேட்டறிந்தனர். அப்போது ரசிகர்களிடம் நடிகர் உதயா சிவகார்த்திகேயனுக்கு முன்பே தலைவா திரைபடத்தில் துப்பாக்கியை என்னிடம் வழங்கி விட்டார் விஜய் என்று நகைச்சுவையோடு பேசினார், இதனையடுத்து மதுரை ரசிகர்கள் அக்யூஸ்ட் திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று தெரிவித்தனர், தொடர்ந்து பசித்தவருக்கு பசி துயர் நீக்குவோம் என்ற பிரெண்ட்ஸ் அறக்கட்டளையை நடிகர் உதயா அறிமுகம் செய்து வைத்தார்.

10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.
07:40Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
03:36தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
11:28நான் அவன சும்மா விட மாட்டேன்.....கம்ருதினை எச்சரித்த பிரஜின் ! பரபரப்பு பேட்டி
07:16லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
03:36அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்