watch : காஷ்மீரில் இராணுவ பாதுகாப்புடன் நடந்த ஷூட்டிங்.. பிரம்மிக்க வைக்கும் லியோ படத்தின் மேக்கிங் வீடியோ இதோ

Mar 23, 2023, 6:50 PM IST

லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் நடைபெற்றது. இதற்காக தனி விமானம் மூலம் படக்குழுவினர் காஷ்மீருக்கு சென்றிருந்தனர். காஷ்மீரில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு தற்போது வெற்றிகரமாக அனைவரும் சென்னை திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரில் ஷூட்டிங் நடத்தப்பட்டபோது என்னென்ன சவால்களையெல்லாம் எதிர்கொண்டோம் என்பதை விளக்கும் வகையில் எமோஷனலான மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் தான் பேசி உள்ளனர். மைனஸ் 20 டிகிரி வரை குளிரில் ஷூட்டிங் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் குளிர் தாங்க முடியாமல் மூக்கில் ரத்தம் வந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியதாக அவர்கள் கூறி உள்ளனர். காஷ்மீரில் இராணுவ பாதுகாப்புடன் தான் லியோ படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது. அங்கு இராணுவ வீரர்களை சந்தித்து நடிகர் விஜய் பேசும் காட்சியும் இந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளது.

50 நாட்களுக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டதில் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் வேலை செய்ததாகவும், ஏதேனும் பிளான் சொதப்பிவிட்டால் உடனே அடுத்த பிளான் உடன் லோகேஷ் தயாராக இருப்பார் என்றும் படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 
அதுமட்டுமின்றி காலை 8 மணிக்கு ஷூட்டிங் என்றால் அதிகாலை 4 மணியில் இருந்தே வேலையை தொடங்கிவிடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோவை படத்தில் திரைக்கு பின்னால் இருந்து வேலை பார்த்த அனைவருக்கும் சமர்பிப்பதாக லியோ படக்குழு பதிவிட்டுள்ளது.