Jan 11, 2023, 7:56 AM IST
வாரிசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளார் தில் ராஜு. விஜய் நடித்துள்ள இப்படத்தை வம்சி இயக்கி உள்ளார். இப்படம் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் FDFS காட்சியை சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார் தயாரிப்பாளர் தில் ராஜு.
படம் பார்த்த பின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தில் ராஜுவை பார்த்து அனைவரும் நம்பர் 1 என கத்தினர். இதனால் குஷியான தில் ராஜு தன் காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டி உள்ளா. இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
முன்னதாக வாரிசு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 ஹீரோ என தில் ராஜு பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், விஜய் ரசிகர்கள் அவரது பேச்சுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கூட தில் ராஜு பேச வரும்போது ரசிகர்கள் நம்பர் 1 என கத்தி ஆரவாரம் செய்தனர். அப்போது பேசத் தொடங்கும் முன் தில் ராஜுவும் நம்பர் 1 என கத்தியது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.