முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் “ரெட்ரோ” படத்திலிருந்து, கண்ணாடி பூவே முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களை மனங்களை கொள்ளை கொள்ளும், அழகான மெலோடி பாடலாக “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை, பாடலாசிரியர் விவேக்கின் அற்புதமான வரிகளில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார். இப்பாடல் வெளியானவுடனே, இசை ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.