Oct 3, 2022, 8:06 AM IST
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. அனுதீப் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை மரியா நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் 2 பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன. அதில் அனிருத் பாடிய பிம்பிலிகி பிலாப்பி பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அந்த பாடலின் வீடியோ புரமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை மரியாவும் சேர்ந்து வேறலெவலில் குத்தாட்டம் போடும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அந்த புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.