இலங்கை தமிழனாக மாறிய சசிகுமார் - வைரலாகும் டூரிஸ்ட் பேமிலி டிரெய்லர்

Published : Apr 23, 2025, 06:06 PM IST

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் டிரெயிலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Tourist Family Movie Official Trailer : சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சசிகுமார் ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபுவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லரை படக்குழு யூடியூப்பில் ரிலீஸ் செய்துள்ளது.

டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் இலங்கைத் தமிழராக நடித்திருக்கிறார். இலங்கையில் இருந்து தப்பி வந்த சசிகுமார் பேமிலி, தங்கள் அடையாளத்தை மறைத்து சென்னையில் எப்படி வாழ்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதையாக இருக்கும் என்பது டிரெய்லர் மூலம் தெரிகிறது. இதில் சசிகுமாரின் மகனாக நடித்துள்ள சிறுவன், காமெடியில் கலக்கி இருக்கிறார். 

சசிகுமார் இலங்கைத் தமிழனாகவே மாறி இருக்கிறார் என்பது டிரெய்லர் மூலமே தெரிகிறது. குடும்பங்களை கவரும் வகையில் அமைந்துள்ள இப்படம் வருகிற மே மாதம் 1ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பரத் விக்ரமன் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more