ஜெட் வேகத்தில் முடிவடைந்த கூலி ஷூட்டிங்! பிரம்மிக்க வைக்கும் மேக்கிங் வீடியோ இதோ

Published : Mar 18, 2025, 07:41 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரஜினிகாந்தின் 171வது திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினியின் மகளாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். மேலும் நாகார்ஜுனா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை ஒட்டி கூலி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.

கூலி திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருப்பது அதன் மேக்கிங் வீடியோ மூலம் தெரிகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் ரிஸ்க் எடுத்து பல்வேறு ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதால் விரைவில் அடுத்தக்கட்ட பணிகளை தொடங்க உள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கூலி படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளனர்.

கூலி திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனர். இது ரஜினிகாந்தின் 172வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more