வந்து கொண்டிருக்கிறேன் அதர்மத்தை சர்வ நாசமாக்க! வெளியானது பிரபாஸின் 'ஆதிபுருஷ்' ட்ரைலர்!

Published : Jun 06, 2023, 10:24 PM IST

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள, 'ஆதிபுருஷ்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

ஓம் ராவத் இயக்கத்தில்,  பூஷன் குமார் தயாரிப்பில், பிரபாஸ், ராகவனான (ராமர்) நடித்துள்ள திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மிக பிரமாண்ட பட்ஜட்டில், 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், ராவணனாக நடித்துள்ளார்.

சீதை கதாபாத்திரத்தில் (ஜானகியாக) கீர்த்தி சனோன் நடித்துளளார், மேலும் சன்னி சிங் மற்றும் தேவதத்தா நாகே உள்ளிட்ட  ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜூன் 16 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக... இப்படத்தின் ப்ரீ -ரிலீஸ் ஈவென்ட் இன்று திருப்பத்தில் நடந்தது. 

திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரபாஸ், கிருத்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டனர். மேலும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் நடுவே, 'ஆதிபுருஷ்' படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது.

மஹாபாரத கதையின் ஒவ்வொரு காட்சிகளையும், தத்ரூபமாக 3டி-யில் படமாக்கியுள்ளது படக்குழு. மேலும் ராகவனாக நடித்துள்ள பிரபாஸ் பேசும் வசனங்களும் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் விதத்தில் உள்ளது. 

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?