Apr 24, 2023, 8:05 PM IST
'பொன்னியின் செல்வன் 2' படம் வெளியாக இன்னும், சில தினங்களே உள்ள நிலையில், இப்படத்தின் புரோமோஷன் பணிகள் படு தூளாக நடந்து வருகிறது. குறிப்பாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துளி பாலா ஆகியோர் சென்னை, டெல்லி, பெங்களூர் என அடுத்தடுத்த இடங்களில் படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
அதே போல், படம் மீதா எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில், படக்குழுவினரும் அடிக்கடி ஏதேனும் வீடியோக்களி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில்... தற்போது, ஆதித்த கரிகாலன் மற்றும் நந்தினியின் சிறு வயது காதலை நினைவு படுத்தும் விதமாக சின்னசிறு நிலவே என்கிற பாடலின் 1 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட... அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.