vuukle one pixel image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நயன்தாராவின் தங்கச்சி

Ganesh A  | Published: Oct 6, 2024, 8:48 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கோலாகலமாக தொடங்கி இருக்கும் நிலையில், அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் விவரமும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு தங்கையாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்த நடிகை ஜாக்குலின் பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மட்டுமின்றி அதில் ஒளிபரப்பான தேன்மொழி என்கிற சீரியலில் ஹீரோயினாகவும் நடித்து அசத்தினார்.