நாம ஜெயிச்சுட்டோம் மாறா... வாரிசு FDFS பார்த்து தியேட்டரிலேயே கண்ணீர்விட்டு அழுத தமன் - எமோஷனல் வீடியோ இதோ

நாம ஜெயிச்சுட்டோம் மாறா... வாரிசு FDFS பார்த்து தியேட்டரிலேயே கண்ணீர்விட்டு அழுத தமன் - எமோஷனல் வீடியோ இதோ

Published : Jan 11, 2023, 12:01 PM IST

சென்னையில் வாரிசு படத்தின் FDFS காட்சியை பார்த்த தமன், அப்படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து கண்கலங்கிப்போனார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். இவர் தமிழில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் இவரது கேரக்டர் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. இதையடுத்து அவருக்கு நடிக்க ஏராளமான வாய்ப்புகள் கிடைத்த போதிலும் தான் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற கனவோடு இருந்ததால், பாய்ஸ் படத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

அதன்பின் முழுநேரமாக இசையமைப்பாளராக களமிறங்கிய தமனுக்கு தமிழ் திரையுலகில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும், தெலுங்கு திரையுலகில் இவருக்கு தொடர்ந்து பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் கிடைத்தன. இதனால் டோலிவுட்டில் அதிகளவில் கவனம் செலுத்திய தமன், அவ்வப்போது கோலிவுட்டில் பணியாற்றி வந்தார்.

அதேபோல் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகனான தமன், அவரது படத்துக்கு ஒரு முறையாவது இசையமைக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்து வந்தார். விஜய்யின் 66-வது படமான வாரிசு மூலம் அவரது நீண்ட நாள் கனவு நிறைவேறியது. வாரிசு படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனதால் இப்படத்தின் ஆடியோ உரிமை ரூ.10 கோடிக்கு விற்பனை ஆனது.

இந்நிலையில், இன்று சென்னையில் வாரிசு படத்தின் FDFS காட்சியை ரசிகர்களுடனும் படக்குழுவினருடனும் சேர்ந்து கண்டுகளித்தார் தமன். படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து எமோஷனல் ஆன தமன், தியேட்டரிலேயே கண்ணீர்விட்டு அழுதார். பின்னர் அவரை இயக்குனர் வம்சி கட்டியணைத்து பாராட்டினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more