Jun 30, 2022, 9:15 PM IST
பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் திடீர் மரணம் திரையுலகையே உலுக்கி உள்ளது. கொரோனா அலை ஓய்ந்துவிட்டதாக அவசப்பட்டுக்கொண்ட மக்களுக்கு இந்த மரணம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கொரோனா தொற்று காரணமாக நுரையீரல் பாதிப்பை சந்தித்த மீனாவின் கணவர் உயிரிழந்தார்.
இறுதிச்சடங்கு முடிவடைந்ததையடுத்து, வித்யாசாகரின் உடல் மகள் நைனிகா மற்றும் மனைவி மீனா ஆகியோர் முன்னிலையில் காரியங்கள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து, கணவர் வித்யாசாகரின் அஸ்தியுடன் நடிகை மீனா கண்கலங்கியபடி வீடு திரும்பினார்.