ஓசூரில் முதன்முறையாக நடைப்பெற்ற மார்கழியில் மக்களிசை, திரளான ரசிகர்கள் பங்கேற்பு

ஓசூரில் முதன்முறையாக நடைப்பெற்ற மார்கழியில் மக்களிசை, திரளான ரசிகர்கள் பங்கேற்பு

Published : Dec 25, 2023, 11:58 AM IST

ஓசூரில் நடத்தப்பட்ட மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் திரளான ரசிகர்கள் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவர் தற்போது நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். இயக்குநர் பா.ரஞ்சித், நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதேபோல் நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பண்பாட்டு நிகழ்வுகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். 

அந்த வகையில் ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் பாரம்பரிய இசைக் கலைஞர்கள், நடன கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இதையடுத்து 2023-ம் ஆண்டுக்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார். அதன்படி கர்நாடாக மாநிலம் கோலாரில் அமைந்திருந்திருக்கும் கே.ஜி.எஃப் (கோலார் தங்க வயல்) நகராட்சி மைதானத்தில் டிசம்பர் 23-ம் தேதி தொடங்கியுள்ளார்.

இரண்டாவது நிகழ்வாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பல்வேறு பாரம்பரிய கலைஞர்கள் பங்கேற்கேற்று பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.. இதைத்தொடர்ந்து சென்னையில் வரும் 28 முதல் 30 வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

ஒசூர் பகுதியில் வாழும் சிலரின் வட்டார மொழியிலான பாடல், பாரம்பரிய இசை ஆகியவை இசைக்கப்பட்டன.. முன்மொழி பேசக்கூடியவர்கள் உள்ள ஒசூரில் எதிர்ப்பார்த்ததை விட மக்களின் ஆதரவு இருந்ததாக ரஞ்சித் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
03:05மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
01:13கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
Read more