விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்திலிருந்து கல்யாண கலவரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

Published : Apr 03, 2025, 08:05 PM ISTUpdated : Apr 03, 2025, 08:07 PM IST

பிரபல நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தில் இருந்து 'கல்யாண கலவரம்' என்கிற கலக்கலான சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ' லவ் மேரேஜ் ' . ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்க, இவருக்கு ஜோடியாக நடிகை சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம்,  கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் கவனிக்க , தயாரிப்பு வடிவமைப்பை எம். முரளி மேற்கொண்டிருக்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் பிலிம்ஸ் - ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, 'கல்யாண கலவரம்' என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 
 

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
Read more