Video : கூலி படக்குழுவுடன் ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்!

Video : கூலி படக்குழுவுடன் ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்!

Published : Mar 14, 2025, 07:30 AM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்தநாளை கூலி படக்குழுவுடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Lokesh Kanagaraj Birthday : கோலிவுட்டில் டிரெண்டிங் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கிய இவரது பயணம் குறுகிய காலகட்டத்திலேயே விஜய், ரஜினி, கமல் என ஜாம்பவான் நடிகர்களின் படங்களை இயக்கி அசுர வளர்ச்சி கண்டிருக்கிறார். இவர் இன்று தனது பிறந்தநாளை கூலி படக்குழுவினருடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இப்படம் 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இன்று தனது பிறந்தநாளை கூலி படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அப்போது சாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன் வீடியோ தான் இது.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
Read more