'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப்பிரபல வனக் கொள்ளைக்காரன்  வீரப்பனின்  வாழ்க்கையையும் அவரது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும்  ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின்  டிரெய்லரை இன்று வெளியிட்டது. 

இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை  வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது. இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில்,  அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒரிஜினல் தமிழ் சீரிஸான ​​'கூச முனிசாமி வீரப்பன்' டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.  

மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) வியத்தகு என்கவுண்டரில் தனது முடிவைச் சந்தித்தார். வரலாறாக மாறிய அவரது வாழ்க்கைகதை  காவல்துறை ஆவணங்களின் ஒரு பகுதியாக உள்ளது.  வரவிருக்கும் ZEE5 தமிழ் ஒரிஜினல் சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்பது வீரப்பனால் அவரது வார்த்தைகளில் விவரிக்கப்படும்  ஒரு தனித்துவமான ஆவணம் ஆகும். இந்த சீரிஸ் அவர் வாழ்வின் மீது ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
03:05மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
01:13கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி