தளபதி 69; களமிறங்குகிறார் ஜெயிலர் பட மாஸ் நடிகர் - அவரே சொன்ன தகவல் - Viral Video!

தளபதி 69; களமிறங்குகிறார் ஜெயிலர் பட மாஸ் நடிகர் - அவரே சொன்ன தகவல் - Viral Video!

Ansgar R |  
Published : Nov 12, 2024, 10:53 PM ISTUpdated : Nov 12, 2024, 10:56 PM IST

Thalapathy 69 : பிரபல நடிகர் ஒருவர், தளபதி விஜயின் 69வது திரைப்படத்தில் தான் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக வருகின்ற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களம் இறங்குகிறார். ஏற்கனவே தனது கட்சியின் கொடி, பெயர் மற்றும் வெகு பிரம்மாண்டமாக ஒரு அரசியல் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் அவர். தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக ஆதரவை பெற்று வரும் அரசியல் தலைவர் விஜய், இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய கட்சி குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இரண்டு திரைப்படப் பணிகளை முடித்த பிறகு தான் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார். அந்த வகையில் ஏற்கனவே வெங்கட் பிரபுவுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இன் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்தார். அந்த திரைப்படமும் வெளியாகி உலக அளவில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 69வது மற்றும் இறுதி திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படத்தில் பிரபல ஹிந்தி திரை உலக நடிகர் பாபி தியோல், நடிகை பூஜா ஹெக்டே நடித்து வரும் நிலையில், கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறியிருக்கிறார். அவர் கன்னட செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த போட்டியில், தளபதி விஜயை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் அரசியலுக்கு சென்றாலும் கட்டாயம் சினிமாவில் இருக்க வேண்டும் என்று விரும்பும் பலரில் நானும் ஒருவன். அவருடைய இறுதி திரைப்படத்தில் எனக்கு நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான கால் ஷீட் எப்படி கொடுக்கப் போகிறேன் என்று தான் தெரியவில்லை. ஆனால் உண்மையில் அவரோடு இணைந்து நடிப்பது எனக்கு மிகவும் சந்தோஷம் என்று கூறியிருக்கிறார்.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more