கங்கனா ரணாவத் இந்திய அளவில் புகழ் அடைந்தவர். பல படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கக்கூடியவர் அவர். மக்களவைத் தேர்தலில் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சூழல் இப்படி இருக்க கங்கனா புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து அவரே அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார்