காதலிக்க நேரமில்லை படத்தின் வைரல் ஹிட் சாங்; என்னை இழுக்குதடி பாடல் வீடியோ இதோ

Published : Feb 07, 2025, 03:29 PM IST

காதலிக்க நேரமில்லை படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த என்னை இழுக்குதடி பாடலின் வீடியோவை படக்குழு யூடியூப்பில் ரிலீஸ் செய்துள்ளது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ரவி மோகன் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அவரது இசையில், வைரல் ஹிட் அடித்த ‘என்னை இழுக்குதடி’ பாடலின் முழு வீடியோ சாங்கை படக்குழு யூடியூபில் ரிலீஸ் செய்துள்ளது.

படம் வெளிவரும் முன்னரே வைரல் ஹிட் அடித்த இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானும், சந்தோஷ் நாராயணின் மகள் தீ-யும் இணைந்து பாடி இருந்தனர். இப்பாடல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தில் ரவி மோகன் உடன் வினய், நடிகர் யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

காதலிக்க நேரமில்லை திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. வருகிற காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 11 ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. தியேட்டரை போல் ஓடிடியிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

03:01"நோ" சொன்ன ரஜினிக்கு இளையராஜா சொன்ன அந்த 'ஒரு' ஜோசியம்! சூப்பர் ஹிட்டு பாட்டு எது தெரியுமா?!
02:16MGR - Saroja Devi | காத்திருந்த எம்ஜிஆர்...காதலை நிராகரித்த சரோஜா தேவி..! கெத்து காட்டிய பைங்கிளி !
02:11ராஜ்கிரணுக்கு No சொன்ன இளையராஜா... ராஜ்கிரணின் சைலண்ட் சம்பவம்...
06:19Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
03:10விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.