தளபதி விஜயை அப்படியே பாலோ பண்ண ஜான்வி கபூர் - எந்த விஷயத்தில் தெரியுமா? வைரல் வீடியோ!

தளபதி விஜயை அப்படியே பாலோ பண்ண ஜான்வி கபூர் - எந்த விஷயத்தில் தெரியுமா? வைரல் வீடியோ!

Ansgar R |  
Published : Aug 18, 2024, 11:31 PM IST

Janhvi Kapoor : பிரபல நடிகை ஜான்வி கபூர் இப்பொது தளபதி விஜயை பின்பற்றி ஒரு விஷயத்தை இப்பொது செய்துள்ளார். அது வைரலாகி வருகின்றது.

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர், கடந்த 2018ம் ஆண்டு முதல் இவர் திரைத்துறையில் பயணித்து வருகிறார். பாலிவுட் உலகில் பல முன்னணி ஹீரோக்களுடன் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த ஜான்வி கபூர், தற்போது முதல் முறையாக தென்னக சினிமாவில் களமிறங்கியுள்ளார். 

பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் "தேவாரா" திரைப்படத்தில் அவர் நாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான ஒரு சில பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த சூழலில் அண்மையில் பிரபல நடிகர் தளபதி விஜய் வாங்கியிருந்த அதே லெக்சஸ் ரக சொகுசு காரை தற்பொழுது ஜான்வி கபூர் வாங்கி அசத்தியுள்ளார். அதன் விலை சுமார் இரண்டு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. தளபதி விஜய் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை அண்மையில் விற்பனை செய்தார். 

இந்நிலையில் அவர் புதிதாக என்ன கார் வாங்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், தனது அரசியல் பயணங்களுக்கு மிகவும் ஏற்றவாறு ஒரு சொகுசு காரை அவர் அண்மையில் வாங்கினார். அது பிரபல லெக்சஸ் நிறுவனத்தின் எல்எம் என்ற மாடல் காராகும். சென்னையில் அதன் ஆன் ரோடு மதிப்பு சுமார் 2.58 கோடி ரூபாய். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் அதே Lexus சொகுசு காரை வாங்கி அசத்தியிருக்கிறார். அந்த வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more