
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வளர்ந்து வரும் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை, கேபி தாசன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை 6.15 மணி முதல் 7.30 மணி வரை சோதனை நடைபெற்றது. சோதனையில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண் PY-01 DC-1951 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சோதனை எதற்காக நடத்தப்பட்டது, எந்த வகையிலும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்த அதிகாரபூர்வ ஆவணம் வெளியாகவில்லை.